சிக்கன் செங்கேசி | Chicken Changezi In Tamil | SideDish | Chicken Recipes | SideDish For Chapati |
#சிக்கன்செங்கேசி #chickenchangezi #chickenrecipes #chicken #sidedishforchapati #sidedishforroti #sidedishrecipes #nonvegsidedish #chickencurry #chickenmasala
#sidedish #chickengravy #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Changezi: https://youtu.be/CdKHKHFQ5RI
Our Other Recipes:
தெலுங்கானா சிக்கன்: https://youtu.be/b0NM4ir7PPo
பெப்பர்சிக்கன்: https://youtu.be/tC2Bu9M4XXU
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சிக்கன் செங்கேசி
தேவையான பொருட்கள்
சிக்கனை ஊறவைக்க
சிக்கன் – 1/2 கிலோ
தயிர் – 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1 பழம்
எண்ணெய்
மசாலா விழுது அரைக்க
எண்ணெய்
பெரிய வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
முந்திரி பருப்பு – கையளவு
தக்காளி – 3 வேகவைத்தது
உப்பு
சிக்கன் செங்கேசி செய்ய
நெய் – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
பால் – 1/2 கப்
பச்சை மிளகாய் – சிறிதளவு பொடியாக நறுக்கியது ஆறிய பிறகு
உப்பு
தண்ணீர் – 1/2 கப்
பிரெஷ் கிரீம் – 2 மேசைக்கரண்டி
கசூரி மேத்தி
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் சிக்கன், தயிர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சைபழச்சாறு சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ஊறவிடவும்.
2. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும். தண்ணீர் மற்றும் மசாலா வற்றும் வரை வேகவிட்டு எடுத்து வைக்கவும்.
3. அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மெல்லிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. பிறகு அதில் ஒரு கையளவு முந்திரி பருப்பு மற்றும் வேகவைத்த தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் தக்காளி வதங்கியதும் ஆறவிட்டு விழுதாக அரைத்தது கொள்ளவும்.
6. பின்பு அடுப்பை குறைந்த தீயில் வைத்து, அதே கடாயில் நெய் சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும், அடுத்து காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள் சேர்க்கவும்.
7. பிறகு அதில் அரைத்த மசாலா விழுதை சேர்க்கவும், அரை கப் பால் சேர்க்கவும்.
8. அடுத்து வேகவைத்த சிக்கனை சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
9. அரை கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும், மசாலாவில் இருந்து எண்ணெய்
பிரிய ஆரம்பித்ததும், பிரெஷ் கிரீம் சேர்த்து அடுப்பை அணைக்கவும். பிறகு சிறிதளவு
கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/