in

ஸ்பைசி சிக்கன் நூடுல்ஸ் | Spicy Chicken Noodles In Tamil | Street Food | Hakka Noodles Recipe


ஸ்பைசி சிக்கன் நூடுல்ஸ் | Spicy Chicken Noodles In Tamil | Street Food | Hakka Noodles Recipe | Noodles Recipe

#ஸ்பைசிசிக்கன்நூடுல்ஸ் #spicychickennoodles #chickennoodles #hakkanoodles #streetfood #noodlesrecipe #chickenrecipes #hemasubramanian #homecookingtamil #noodles #cooking #howtomake #recipe #cuisine

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Spicy Chicken Noodles : https://www.youtube.com/watch?v=OjNXtiymYj0

Our Other Recipes :
டிராகன் சிக்கன் : https://www.youtube.com/watch?v=7N3nrc8PLk0

சில்லி பன்னீர் : https://www.youtube.com/watch?v=AitDEbvY2L4

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஸ்பைசி சிக்கன் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்

சிக்கன்’னை பிரை செய்ய

எழும்பில்லாத சிக்கன் – 500 கிராம்
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
வினிகர் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 3 தேக்கரண்டி

நூடுல்ஸ்’ஸை வேகவைக்க

நூடுல்ஸ் – 200 கிராம்
தண்ணீர்
உப்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி

சாஸ் கலவை செய்ய

சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் – 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் – 2 மேசைக்கரண்டி
க்ரீன் சில்லி சாஸ் – 2 மேசைக்கரண்டி
சர்க்கரை – 1/4 தேக்கரண்டி
பூண்டு – 1/2 தேக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1/2 தேக்கரண்டி நறுக்கியது

காய்கறிகளை வேகவைக்க

எண்ணெய் – 1 தேக்கரண்டி
குடைமிளகாய் – 1 நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
முட்டைகோஸ் – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
மிளகு தூள் – 1 சிட்டிகை

ஸ்பைசி சிக்கன் நூடுல்ஸ் செய்ய

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
பூண்டு நறுக்கியது
இஞ்சி – சிறிய துண்டு நறுக்கியது
சிவப்பு மிளகாய் – 2 நறுக்கியது
வேகவைத்த நூடுல்ஸ்
பிரை செய்த சிக்கன்
வதக்கிய காய்கறிகள்
வெங்காயத்தாள் நறுக்கியது
செய்த சாஸ் கலவை

செய்முறை
1. பாத்திரத்தில் சிக்கன், சோயா சாஸ், வினிகர், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. 1 மணி நேரம் கழித்து, கடாயில் எண்ணெய் ஊற்றி, அதிக தீயில் சிக்கன்’னை பிரை செய்யவும்.
3. சிக்கன் முழுமையாக வெந்ததும், எடுத்து வைக்கவும்.
4. கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் நூடுல்ஸ் சேர்த்து வேகவைக்கவும்.
5. நூடுல்ஸ் வெந்ததும், இதில் எண்ணெய் ஊற்றி கலந்து, தண்ணீரை வடிகட்டி, ஆறவிடவும்.
6. சாஸ் கலவை செய்ய, பாத்திரத்தில், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தக்காளி கெட்சப், க்ரீன் சில்லி சாஸ், சர்க்கரை, பூண்டு, இஞ்சி சேர்த்து கலந்து எடுத்துவைக்கவும்.
7. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் குடைமிளகாய், கேரட், முட்டைகோஸ் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி எடுத்துவைக்கவும்.
8. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.
9. இதில் வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும்.
10. அடுத்து இதில் பிரை செய்த சிக்கன், வதக்கிய காய்கறிகள் மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து கிண்டவும்.
11. இறுதியாக செய்த சாஸ் கலவையை ஊற்றி, நூடுல்ஸ்’ஸை நன்கு பிரட்டவும்.
12. ஸ்பைசி சிக்கன் நூடுல்ஸ் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/

source

Kids dessert recipe. Easy dessert?????????

Chicken Bread Pocket Recipe | Ramadan 2021 Special Recipe #RamadanSpecialrecipe #snacks #iftarrecipe